ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே அருமையாய் - Aanandhamaai Name Aarparipome

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே அருமையாய்

இயேசு நமக்களித்த

அளவில்லா கிருபை பெரிதல்லவோ

இப்புது தினமதிலே

ஆத்துமமே என் முழு உள்ளமே

உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி பொங்கிடுதே

என் உள்ளத்திலே

பேரன்பின் பெருவெள்ளமே - அல்லேலுயா!

கடந்த நாட்களில் கைவிடாமலே

கண்மணி போல் எம்மைக் காத்தாரே

கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்

கருத்துடன் பாடிடுவோம் - ஆத்துமமே

படகிலே படுத்து உறங்கினாலும்

கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்

கடலையும் காற்றையும் அமர்த்தி

எம்மைக் காத்தாரே அல்லேலூயா - ஆத்துமமே

யோர்தானைக் கடந்தோம் அவர் பெலத்தால்

எரிகோவைத் தகர்த்தோம் அவர் துதியால்

இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே

என்றென்றுமாய் வாழுவோம் - ஆத்துமமே

பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்

அதி சீக்கிரத்தில் முடிகிறதே

விழிப்புடன் கூடித் தரித்திருப்போம்

விரைந்தவர் வந்திடுவார் - ஆத்துமமே