ஆனந்த துதி ஒலி கேட்கும் - Aanantha thuthi oli kaetkum

ஆனந்த துதி ஒலி கேட்கும்

ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்

ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்

ஆண்டவர் வாக்கு பலிக்கும் ஆ… ஆ…

மகிமைப்படுத்து வேனென்றாரே

மகிபனின் பாசம் பெரிதே

மங்காத புகழுடன் வாழ்வோம்

மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே

குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்

கரையில்லா தேவனின் வாக்கு ஆ… ஆ…

ஆதி நிலை எகுவோமே

ஆசீர் திரும்பப் பெறுவோம்

பாழான மண்மேடுகள் யாவும்

பாராளும் வேந்தன் மனையாகும்

சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்

சீயோனின் மகிமை திரும்பும் ஆ… ஆ…

விடுதலை முழங்கிடுவோமே

விக்கினம் யாவும் அகலும்

இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை

இரட்சகன் மீட்பருள்வாரே

நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்

விடுதலை பெருவிழா காண்போம் ஆ… ஆ…

யாக்கோபு நடுங்கிடுவானோ

யாக்கோபின் தேவன் துணையே

அமரிக்கை வாழ்வை அழைப்போம்

ஆண்டவர் மார்பில் சுகிப்போம்

பதறாத வாழ்வும் சிதறாத மனமும்

பரிசாக தேவனருள்வார் ஆ… ஆ…

ஆனந்த துதி ஒலி கேட்கும் - Aanantha thuthi oli kaetkum

Aanantha thuthi oli kaetkum

Aadal paadal saththamum thonikkum

Aakaaya vinnmeenaay avar janam perukum

Aanndavar vaakku palikkum — aa… aa…

Makimaippaduththu vaenentarae

Makipanin paasam perithae

Mangaatha pukaludan vaalvom

Maatchi pettuyarnthiduvomae

Kurukida maattom kuntida maattom

Karaiyillaa thevanin vaakku aa… aa…

Aathi nilai ekuvomae

Aaseer thirumpap peruvom

Paalaana mannmaedukal yaavum

Paaraalum vaenthan manaiyaakum

Sirai vaalvu maraiyum seer vaalvu malarum

Seeyonin makimai thirumpum aa… aa…

Viduthalai mulangiduvomae

Vikkinam yaavum akalum

Idukkannkal soolnthidum vaelai

Iratchakan meetparulvaarae

Nukangal murinthidum kattukal arunthidum

Viduthalai peruvilaa kaannpom aa… aa…

Yaakkopu nadungiduvaano

Yaakkopin thaevan thunnaiyae

Amarikkai vaalvai alaippom

Aanndavar maarpil sukippom

Patharaatha vaalvum sitharaatha manamum

Parisaaka thaevanarulvaar aa… aa…