ஆவியை அருளுமே சுவாமீ - Aaviyai Arulume Swaami

ஆவியை அருளுமே சுவாமீ

எனக் காயுர் கொடுத்த வானத்தினரசே

நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோ

நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ

முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ

முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ

பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்

பாம சந்தோஷம் நீடிய சாந்தம்

தேவ சமாதானம் நற்குணம் தயவு

திட விசுவாசம் சிறிதெனுமில்லை

தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்

திரி யவியாமலே தீண்டியே யேற்றும்

பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்

பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்

ஆவியை அருளுமே சுவாமீ - Aaviyai Arulume Swaami

Aaviyai Arulume Swaami

Enak Kaayur Kodutha Vaanaththinarase

Narkani Thedivarun Kaalanagal Lallavo

Naanoru Kaniyatra Paazhmara Mallavo

Murkani Mugangkaanaa Vempayir Allavo

Muzhu Nenjam Vilaivatra Uvarnila Mallavo

Paavikku Aaviyin Kaniyenum Snegam

Paama Santhosham Neediya Santham

Deva Samaadhaanam Narkunam Thayavu

Thida Visuvaasam Siridenum Illai

Theepaththuk Kenneyaich Seekiram Oottum

Thiri Yaviyaamaley Theendiyee Yetrum

Paava Asoochangkal Vilakkiye Maattrum

Parisuththavaranth Then Kuraigalai Theerum