தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச் - Devane naan umathandaiyil innum nerungi

தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச்

சேர்வதே என் ஆவல் பூமியில்

மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்

கோவே தொங்க நேரிடினும்

ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

யாக்கோபைப்போல் போகும் பாதையில் பொழுது பட்டு

இராவில் இருள் வந்து மூடிட

தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்

நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா!

பரத்துக்கேறும் படிகள் போலவே என் பாதை தோன்றப்

பண்ணும் ஐயா என்றன் தேவனே

கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை

அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும்

நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து

கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்

இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே

என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

ஆனந்தமாம் செட்டை விரித்துப் பரவசமாய்

ஆகாயத்தில் ஏறிப் போயினும்

வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்

மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்

தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச் - Devane naan umathandaiyil innum nerungi

Devane naan umathandaiyil innum nerungi

servathae en aaval poomiyil

maavaliya koramaaka van siluvai meethinil naan

kovae thonga naeritinum

aavalaay ummanntai servaen

yaakkopaippol pogum paathaiyil poluthu pattu

iraavil irul vanthu mootida

thookkaththaal naan saaynthu thoonginaalum en kanaavil

Nnokkiyummai kittich servaen, vaakkadangaa nalla naathaa!

paraththukkaerum patikal polavae en paathai thontap

pannnum aiyaa, entan thaevanae,

kirupaiyaaka neer enakkuth tharuvathellaam umathanntai

arumaiyaay ennaiyalaiththu anpin thoothanaakach seyyum

niththiraiyinintu viliththuk kaalai elunthu

karththaavae naan ummaip pottuvaen

iththaraiyil unthan veedaay enthuyark kal naattuvaenae,

entan thunpaththin valiyaay innum ummaik kittich servaen

aananthamaam settai viriththu paravasamaai

aakaayaththil aerip poyinum

vaana manndalang kadanthu paranthu maelae sentitinum

makilvutru kaalaththilum naan maruviyummaik kittich servaen