எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே இருப்பவரே
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைத்தவரே நிறைபவரே
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே மறவாமல் செலுத்துகிறேன்
உயிர் பிழைத்தேன், உதவி பெற்றேன்
உயிர் உள்ளவரை துதிப்பேன்
தகப்பனாக இதுவரையும்
தோளின் மீதே சுமந்து வந்தீர்
தந்தையே உம் தயவால்
தாண்டினேன் வனாந்திரத்தை
அரண்டவேளை அன்னையைப்போல்
இறுக்கமாக அணைத்துக்கொண்டீர்
இருளெல்லாம் விலக்கினீரே
அழுகையை நிறுத்தினீரே
தனிமையிலே நண்பனைப்போல்
நெடுந்தூரமும் உடன் நடந்தீர்
அனாதையாய் அலைந்ததில்லை
அன்பர் நீர் அருகினிலே
குயவனாக வனைந்திட்டீரே
களிமண்ணையே கிருபையாலே
குறை கண்டு அழிக்கவில்லை
கரத்தினில் வைத்துள்ளீரே
Ellavatilum ellaamumaaga irundhavare iruppavare
Ellavatayum ellavataalum niraiththavare niraipavare
Sthothirame sthothirame
Maravaamal seluthugiren
Uyir pizhaiththen, uthavi peten
Uyir ullavarai thuthippen
Thagappanaaga ithuvaraiyum
Tholin meedhe sumandhu vandheer
Thandhaiye um thayaval
Thaandineen vanandhiraththai
Arandaveilai annaiyaipol
Irukkamaaga anaiththukondeer
Irulellaam vilakkineere
Azhugaiyai niruththineere
Thanimaiyile nanbanai pol
Nedundhooramum udan nadandheer
Anaathaiyaai alaindhathillai
Anbar neer aruginilee
Kuyavanaaga vanaindhitree
Kalimannaeye kirubaiyaale
Kurai kandu azhikka villai
Karathinil vaithullire