என்னோடு கூட இருப்பார் இயேசு - Ennodu Kooda Iruppaar Yesu

என்னோடு கூட இருப்பார் இயேசு

என்னோடு கூட இருப்பார்

எந்நாளும் கூட இருப்பார் இயேசு

எப்போதும் கூட இருப்பார்

கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்

கைவிட மாட்டார் இயேசு கைவிடமாட்டார் – என்

சோதனை நேரத்தில் கூட இருப்பார்

சோர்ந்திடும் வேளையில் தாங்கி நடத்துவார் - 2

சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார்

சாய்ந்து இளைப்பாற மார்பிலணைப்பார் - 2

செய்திடும் காரியம் வாய்த்திட செய்வார்

சேனையின் கர்த்தராய் கூட இருப்பார் - 2

மனுஷரின் தயவை உண்டு பண்ணுவார்

நானிலம் போற்றிட உயர்த்தி மகிழ்வார் - 2

ஆவியின் கனியால் அலங்கரிப்பார்

வல்லமை வரங்களை பெருகப்பண்ணுவார் - 2

போக்கிலும் வரத்திலும் கூட இருப்பார்

பரலோக வாழ்வை எனக்குத்தருவார் - 2

என்னோடு கூட இருப்பார் இயேசு - Ennodu Kooda Iruppaar Yesu

Ennodu Kooda Iruppaar Yesu

Ennodu Kooda Iruppaar