இன்று கண்ட எகிப்தியனை - என்றுமே - Indru Kanda Egipthiyanai

இன்று கண்ட எகிப்தியனை - என்றுமே

இனி காண்பதில்லை - (2)

இஸ்ரவேலை காக்கும் தேவன்

உறங்கவில்லை தூங்கவில்லை

கசந்த மாரா மதுரமாகும்

வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்

கண்ணீரோடு நீ விதைத்தால்

கெம்பீரமாய் அறுத்திடுவாய் - இஸ்ரவேலை

தண்ணீர்களை கடக்கும் போது

கண்ணீரை அவர் துடைத்திடுவார்

வெள்ளம்போல சத்துரு வந்தால்

ஆவியால் கொடியேற்றிடுவார் - இஸ்ரவேலை

சோர்ந்து போன உனக்கு அவர்

சத்துவத்தை அளித்திடுவார்

கோரமான புயல் வந்தாலும்

போதகத்தால் தேற்றிடுவார் - இஸ்ரவேலை

வாதை உந்தன் கூடாரத்தை

அணுகாமல் காத்திடுவார்

பாதையிலே காக்கும் படிக்கு

தூதர்களை அனுப்பிடுவார் - இஸ்ரவேலை

இன்று கண்ட எகிப்தியனை - என்றுமே - Indru Kanda Egipthiyanai

Indru Kanda Egipthiyanai

Endrumey Nee Kanbathillai

Isravelai Kakum Devan

Urangavillai Thoongavillai

Kasantha Mara Mathuramagum

Vasanthamaga Valkai Marum

Kaneerodey Nee Vithaithal

Kemperamai Aruthiduvai

Thaneerai Nee Kadakumpothu

Kaneerai Avar Thudaithiduvar

Vellam Pondra Sathru Vanthal

Aveeyal Kodi Yetriduvar

Vathai Unthan Koodarathai

Anugamal Kathiduvar

Pathaiyiley Kakkumbadiku

Thoothargalai Niruthiduvar

Sornthu Pona Maganey Unakku

Sathuvathai Alithuduvar

Koramana Puyal Vanthalum

Pothagathal Theytriduvar