கலங்காதே கலங்காதே - Kalangaathe Kalangaathe

கலங்காதே கலங்காதே

கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்

முள்முடி உனக்காக

இரத்தமெல்லாம் உனக்காக

பாவங்களை அறிக்கையிடு

பரிசுத்தமாகி விடு - நீ

கல்வாரி மலைமேலே

காயப்பட்ட இயேசுவைப் பார்

கரம் விரித்து அழைக்கின்றார்

கண்ணீ ரோடு ஓடி வா - நீ

காலமெல்லாம் உடன் இருந்து

கரம்பிடித்து நடத்திச் செல்வார்

கண்ணீரெல்லாம் துடைப்பார்

கண்மணி போல் காத்திடுவார் - உன்னை

உலகத்தின் வெளிச்சம் நீ

எழுந்து ஒளி வீசு

மலைமேல் உள்ள பட்டணம் - தம்பி (நீ)

மறைவாக இருக்காதே

உலகம் உன்னை வெறுத்திடலாம்

உற்றார் உன்னைத் துரத்திடலாம்

உன்னை அழைத்தவரோ

உள்ளங்கையில் ஏந்திடுவார்

உன் நோய்கள் சுமந்து கொண்டார்

உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்

நீ சுமக்கக் தேவையில்லை

விசுவாசி அது போதும்

கலங்காதே கலங்காதே - Kalangaathe Kalangaathe

Kalangaathe Kalangaathe

Karththar Unnaik Kaividamaattar

Mulmuti Unakkaaka

Iraththamellaam Unakkaaka

Paavangalai Arikkaiyidu

Parisuththamaaki Vidu Nee

Kalvaari Malaimaelae

Kaayappatta Yesuvaip Paar

Karam Viriththu Alaikkintar

Kannnneerodu Oti Vaa Nee

Kaalamellaam Udan Irunthu

Karampitiththu Nadaththich Selvaar

Kannnneerellaam Thutaippaar

Kannmanni Pol Kaaththiduvaar Unnai

Ulakaththin Velichcham Nee

Elunthu Oli Veesu

Malaimael Ulla Pattanam – Thampi (Nee)

Maraivaaka Irukkaathae

Ulakam Unnai Veruththidalaam

Utrar Unnai Thuraththidalaam

Unnai Alaiththavaro

Ullangaiyil Aenthiduvaar

Un Nnoykal Sumanthu Konndaar

Un Pinnikal Aettuk Konndaar

Nee Sumakkath Thaevaiyillai

Visuvaasi Athu Pothum