கர்த்தாவில் சந்தோசம் அவர் என் பெலன்
பாரினில் வாழும் நாள் அவர் என் பெலன்
ஆவர் என் அடைக்ககலம் ஆறுதல்
என்னாளும் அவர் எந்தன் சர்வமுமே - 2
பல நாட்கள் எண்ணினேன் தனிமையென்று
அந்நாளில் அவர் என்னோடு சொன்னார் -2
உலகத்தின் முடிவுவரை எல்லா நாளும்
உன்னுடன் நான் இருப்பேன் -2
பெலவீனன் என்று நினைத்தேன் ஓர் நாள்
அந்நாளில் அவர் என்னோடு சொன்னார்- 2
எல்லாமும் செய்ய பெலன் தருபவர்
எப்போதும் கூட உண்டு - 2
சிநேகிதர் இல்லையென்றேன் ஓர் நாள் அந்நாளில் அவர் என்னோடு சொன்னார் - 2
நித்திய சிநேகத்தால் உன்னை நேசித்தவர்
நித்தமும் கூட உண்டு - 2
என்னால் எதுவுமே கூடாதென்றேன்
அந்நாளில் அவர் என்னோடு சொன்னார்- 2
எல்லாம் உனக்காக செய்து முடிப்பவர்
எந்நாளும் கூடிருப்பார்-2
Karthavil santhosham avar en belan
Paarinil vaazhum naal avar en belan