நேசப்பிள்ளை என்று அப்பா நீர் சொல்ல வேண்டும் - Nesa Pillai Endru Appa Neer Solla Vendum

நேசப்பிள்ளை என்று அப்பா நீர் சொல்ல வேண்டும்

பாசமுடன் என்னை அணைத்திடனும் - 2

தந்துவிட்டேன் என்னை உம் கரத்தில் - 2

ஆசீர்வதியுமைய்யா - 2 - நேசப்பிள்ளை

நல்ல பிள்ளையாக உம்மோடு நான் இருப்பேன்

நாளெல்லாம் உம்மையே பற்றிக்கொள்வேன் - 2

தொல்லைகள் இல்லையையா

வாழ்வெல்லாம் இன்பம் ஐயா

அப்பா உம்மோடு வாழ்வதினால் - 2 - நேசப்பிள்ளை

உம் சத்தம் கேட்டிடுவேன் உம் சித்தம் செய்திடுவேன்

உம் தூய வழியில் நடந்திடுவேன் - 2

உள்ளத்தின் ஆனந்தமே

இல்லத்தின் பேரின்பமே

அப்பா நீர் எந்தன் நிரந்தரமே - 2 - நேசப்பிள்ளை

நம்பிக்கை தந்தீரைய்யா நங்கூரமானீரைய்யா

நாளெல்லாம் பாடுவேன் மகிழ்ந்திருப்பேன் - 2

கவலைகள் இல்லையையா

கலக்கமும் இல்லையையா

அப்பா நீர் என்னோடு இருப்பதினால் - 2 - நேசப்பிள்ளை