ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே - Oru kuraivillamal kaathu vantheere

ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே

கோடி ஸ்தோத்திரமே

என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே

ஆயிரம் ஸ்தோத்திரமே

பதினாயிரம் ஸ்தோத்திரமே

ஆருயிரே ஆறுதலே

ஆயுளெல்லாம் காப்பவரே

என் முன்னே சென்றீரே

பயணத்தை காத்தீரே

மகிமையால் மூடிக்கொண்டீரே

எங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே

வருஷத்தை நன்மையினால்

முடி சூட்டி மகிழ்ந்தீரே

பாதைகள் நெய்யாய் பொழிந்தீரே

எல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே

என் விளக்கை ஏற்றினீரே

என் இருளை அகற்றினீரே

எதிரியின் கண்கள் முன்பாக

என் தலையை நிமிரச் செய்தீரே

உள்ளங்கைகளிலே

என்னை வரைந்து வைத்தீரே

நீர் என் தாசன் என்றீரே

உன்னை எப்படி மறப்பேன் என்றீர