பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே - Pirandha naal mudhalaai

பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே

தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே

மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி

அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை

தீங்கு நாளிலே கூடார மறைவிலே

ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே

கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே

துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே

பிறக்குமுன்னமே என் பெயரை அறிந்தீரே

அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே

என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்

அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே

பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே - Pirandha naal mudhalaai

Pirandha naal mudhalaai

um thoalil sumandheere

Thagappanilum maelaai thani paasam vaiththeere

Methuvaana thenral kodungaatraai maari

Adiththa vaelaikkilum ennai keezhe vida villai

Theengu naalilae kootaaramaraivilae

Oliththu vaiththeere um velaikkaagavae

Kanmalaimael ennai uyarththi vaiththeere

Thudhikkum pudhu paadal en naavil thanntheere

Pirakkumunname en peyarai arindheere

Avayam anaiththumae azhagaaga varaintheere

Ennidam ullathaiyae ummidam oppaithaen

Annal varaiyilumae athai kaaththida vallavare