பொன்னான இயேசுவை - Ponnaana Yesuvai

பொன்னான இயேசுவை

புண்ணிய நல் நேசரை – கொண்டு

செல்வோம் பூலோகமெங்கும்

அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம்

தேவனே வந்து நம்மை நடத்திடுவார்

தேவையறிந்து பயன்படுத்திடுவார்

அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்

அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை

அஞ்சாமல் செல்வோம்

வஞ்சகனை வெல்வோம் – அரணான

கோட்டைகளை பிடித்திடுவோம் – நாம்

அவர் - எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்

இந்த நாளில் எங்கள் மூலம் நிச்சயம் செய்வார்

எத்தனையோ நோய்கள்

அத்தனையும் போக்கும் – இயேசுவின்

இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம்

காலமும் கடலலையும் காத்திருக்காது

இந்த காலத்திலே உலகை கலக்கிடுவோம்

கல்லான நெஞ்சம் கரைந்திடச் செய்யும்

கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் – நாம்

பொன்னான இயேசுவை - Ponnaana Yesuvai

Ponnaana Yesuvai

Punnnniya nal naesarai

Konndu selvom poolokam engum

Avar onte vali ente kooruvom

Devanae nammai nadaththiduvaar

Thevaiyai arinthu payanpaduththiduvaar

Avar ennaalum nammodu

Iruppathinaal alaikal puyalkal

Nammai asaippathillai

Anjaamal selvom vanjakanai velvom

Arannaana kottaைkalai pitiththiduvom

Eliyaa Elisaa moolam arputham seythaar

Intha naalil ungal moolam nichchayam seyvaar

Eththanaiyo Nnoykal

Aththanaiyum pokkum

Yesuvin iraththaththaalae jeyam peruvom

Kaalamum kadalalaiyum kaaththirukkaathu - intha

Kaalaththilae ulakai kalakkiduvom

Kallaana nenjam karainthida seyyum

Kanivaana karththar panni seythiduvom