உகந்த காணிக்கையாய் - Ugantha Kaanikkayai

உகந்த காணிக்கையாய்

ஒப்புக் கொடுத்தேனையா

சுகந்த வாசனையாய்

நுகர்ந்து மகிழுமையா

தகப்பனே உம் பீடத்தில்

தகனபலியானேன்

அக்கினி இறக்கிவிடும்

முற்றிலும் எரித்துவிடும் – உகந்த

வேண்டாத பலவீனங்கள்

ஆண்டவா முன் வைக்கின்றேன்

மீண்டும் தலை தூக்காமல்

மாண்டு மடியட்டுமே

கண்கள் தூய்மையாக்கும்

கர்த்தா உமைப் பார்க்கணும் -என்

காதுகள் திறந்தருளும்

கர்த்தர் உம் குரல் கேட்கணும்-என்

அப்பா உம் சமூகத்தில்

ஆர்வமாய் வந்தேனையா

தப்பாமல் வனைந்து கொள்ளும்

உப்பாக பயன்படுத்தும்

உகந்த காணிக்கையாய் - Ugantha Kaanikkayai

Ugantha Kaanikkayai

Ukantha kaannikkaiyaay

Oppuk koduththaenaiyaa

Sukantha vaasanaiyaay

Nukarnthu makilumaiyaa

Thakappanae um peedaththil

Thakanapaliyaanaen

Akkini irakkividum

Muttilum eriththuvidum – ukantha

Vaenndaatha palaveenangal

Aanndavaa mun vaikkinten

Meenndum thalai thookkaamal

Maanndu matiyattumae

Kannkal thooymaiyaakkum

Karththaa umaip paarkkanum -en

Kaathukal thirantharulum

Karththar um kural kaetkanum-en

Appaa um samookaththil

Aarvamaay vanthaenaiyaa

Thappaamal vanainthu kollum

Uppaaka payanpaduththum