உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் - 2
என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே
எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையும் கிருபையும் தொடர செய்து
என்னை மீண்டும் நடக்கவைத்தீரே
பாவி என்று என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னையும் உம்முடன் சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீரே
Ummai Aarathipen
ummai aaraathippaen ummai aaraathippaen - 2
en naatkal mutiyum varai
en jeevan piriyum varai
en suvaasam oliyum varai
ummaiyae aaraathippaen
ummaiyae aaraathippaen - 2
ummai aaraathippaen ummai aaraathippaen - 2
Thaayin karuvil uruvaakum munnae
paer solli alaiththavar neerae
thaayinum maelaaka anpu vaiththu
neer enakkaaka jeevan thantheerae - 2
Eththanai murai idarinaalum
aththanaiyum manniththeerae
nanmaiyaiyum kirupaiyum thodarachcheythu
ennay meenndum nadakka vaiththeer - 2
paavi ente ennai thallidaamal
anpodu annaiththu konnteerae
ennayum ummudan serththukolla
neer enakkaaka meenndum varuveer - 2