ஆண்டவா பிரசன்னமாகி - aandavaa prasannamagai

ஆண்டவா பிரசன்னமாகி

ஜீவன் ஊதி உயிர்ப்பியும்

ஆசை காட்டும் தாசர் மீதில்

ஆசிர்வாதம் ஊற்றிடும்

1.⁠ ⁠அருள்மாரி எங்கள் பேரில்

வருஷிக்கப் பண்ணுவீர்

ஆசையோடு நிற்கிறோமே

ஆசீர்வாதம் ஊற்றுவீர்

2.⁠ ⁠தேவரீரின் பாதத்தண்டை

ஆவலோடு கூடினோம்

உந்தன் திவ்ய அபிஷேகம்

நம்பி நாடி அண்டினோம்

3.⁠ ⁠ஆண்டவா! மெய்பக்தர் செய்யும்

வேண்டுகோளைக் கேட்கிறீர்

அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்

இன்று மூட்டி நிற்கிறீர்

4.⁠ ⁠தாசர் தேடும் அபிஷேகம்

இயேசுவே கடாட்சியும்

பெந்தே கோஸ்தின் திவ்ய ஈவை

தந்து ஆசிர்வதியும்

ஆண்டவா பிரசன்னமாகி - aandavaa prasannamagai

aandavaa prasannamagai

jeevan oothi uyirppiyum