அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் - avar vaarththaiyin maelae naan saarnthiruppathaal

அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால்

கவலை ஒன்றும் எனக்கில்லையே

என் தேவைகளெல்லாம் அவர் பார்த்துக் கொள்வதால்

நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே -2

யெகோவாயீரே எந்தன் தேவன்

தேவைகள் யாவும் சந்திப்பீரே

யெகோவா ராஃபா எந்தன் தேவன்

எந்நாளும் சுகம் தருவீரே -2

மரண இருளின் பள்ளதாக்கில் நடக்க நேர்ந்தாலும்

என் அப்பா என்னோடிருப்பதாலே பயப்படமாட்டேன் -2

எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள்

எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் -2

நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்

என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டு கொண்டாரே -2

என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே

ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே -2

அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் - avar vaarththaiyin maelae naan saarnthiruppathaal

avar vaarththaiyin maelae naan saarnthiruppathaal

kavalai ontum enakkillaiyae

en thaevaikalellaam avar paarththuk kolvathaal

naan karththarukkul makilnthiruppaenae -2

yekovaayeerae enthan thaevan

thaevaikal yaavum santhippeerae

yekovaa raaqpaa enthan thaevan

ennaalum sukam tharuveerae -2

marana irulin pallathaakkil nadakka naernthaalum

en appaa ennotiruppathaalae payappadamaattaen -2

enakku virothamaay aayirangalum pathinaayirangal

elunthaalum anjidamaattaen -2

Nerukkathile karththarai Nnokki kooppittaen

ennai visaalaththil konnduvanthu meettu konndaarae -2

en patchaththil karththar iruppathinaalae

orupothum naan asaikkappaduvathillaiyae -2