உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் - ungal thukkam santhoshamai marum

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

உங்கள் கவலைகள் கண்ணீர்

எல்லாம் மறைந்து விடும்

கலங்காதே மகனே கலங்காதே மகளே

என் இயேசு கைவிடமாட்டார்

கடந்ததை நினைத்து கலங்காதே

நடந்ததை மறந்துவிடு

கர்த்தர் புதியன செய்திடுவார்

இன்றே நீ காண்பாய் – கலங்கிடவே வேண்டாம்

நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்

உடைந்த உள்ளம் தாங்குகிறார்

காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்

கண்ணீர் துடைக்கிறார் – உன்

திராணிக்கு மேலாக சோதிக்கப்பட

ஒருநாளும் விடமாட்டார்

தாங்கிடும் பெலன் தருவார்

தப்பிச் செல்ல வழி செய்வார்

நல்லதோர் போராட்டம் போராடுவோம்

விசுவாசம் காத்துக்கொள்வோம்

நீதியின் கிரீடம் நமக்கு உண்டு

நேசர் வருகையில் தந்திடுவார் – நாம்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் - ungal thukkam santhoshamai marum

ungal thukkam santhoshamai marum

ungal kavalaikal kanneer

ellaam marainthu vidum

kalangaathae makanae, kalangaathae makalae

en Yesu kaividamaattar

kadanthathai ninaiththu kalangaathae

nadanthathai maranthuvidu

karththar puthiyana seythiduvaar

inte nee kaannpaay - kalangidavae vaenndaam

norungunnda ithayam thaettukiraar

utaintha ullam thaangukiraar

kaayangal anaiththaiyum kattukiraar

kannnneer thutaikkiraar - un

thiraannikku maelaaka sothikkappada

orunaalum vidamaattar

thaangidum pelan tharuvaar

thappich sella vali seyvaar

nallathor poraattam poraaduvom

visuvaasam kaaththukkolvom

neethiyin kireedam namakku unndu

naesar varukaiyil thanthiduvaar - naam